பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள்
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!!!
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும் திருட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த
மருந்து சொல்லடா!!!
இருக்கும் அறிவை
மடமை மூடிய இருட்டு உலகமடா!!!
வாழ்வில் எந்த
நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த
மருந்து சொல்லடா!!!
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!!!
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும் திருட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த
மருந்து சொல்லடா!!!
விளையும் பயிரை
வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்!!!
ம்..ம்..ம்..ம்
ஓ...ஓ...ஓ...ஓ ஓ...ஓ...ஓ...ஓ
விளையும் பயிரை
வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்!!!
மனம் வெந்திடும்
தோட்டக்காரனிடம்!!!
விரட்டல் வார்த்தைகள்
ஆடும் பல வரட்டு கீதமும் பாடும்!!!
விதவிதமான பொய்களை
வைத்துப் புரட்டும் உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா!!!
அதன் அழகை குறைக்க நேவும்!!!
கொம்பு ஒடிந்து
கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்!!!
கொம்பு ஒடிந்து
கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்!!!
சிலர் குணமும்
இதுபோல்
குறுகி போகும்
கிறுக்கு உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த
மருந்து சொல்லடா!!!
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!!!
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும் திருட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து
நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த
மருந்து சொல்லடா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக