பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2020

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா | Pattukottai kalyanasundaram lyrics

=
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள்

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!!!
சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா!!!

நான் சொல்லப் போற வார்த்தையை 
நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா!!!

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!!!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி!!!
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி!!!
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி!!!
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி!!!

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி!!!
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி!!!
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி!!!
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!!!

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா!!!
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா!!!

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா!!!
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா!!!

தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா!!!
தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா!!!

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா!!!
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!!!

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு!!!
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு!!!
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க!!!
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க!!!

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை!!!
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை!!!
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே
நீ வெம்பி விடாதே!!!
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!!!

திருடாதே பாப்பா திருடாதே | Pattukottaikalyanasundaram lyrics

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள்

திருடாதே பாப்பா திருடாதே!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!
வறுமை நிலைக்கு பயந்து விடாதே!!!
வறுமை நிலைக்கு பயந்து விடாதே!!!
திறமை இருக்கு மறந்து விடாதே!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து!!!சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!!!தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!!!
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து!!!
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!!!
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!!!

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா!!!
அது திரும்ப வராம பாத்துக்கோ!!!
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா!!! 
அது திரும்ப வராம பாத்துக்கோ!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!

கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது!!!
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது!!!
இனி எடுக்குற அவசியம் இருக்காது!!!

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்!!!
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்!!!

பதுக்கிற வேலையும் இருக்காது!!!
ஒதுக்குற வேலையும் இருக்காது!!!

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா ……
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா!!!

கெடுக்குற நோக்கம் வளராது!!!
மனம் கீழும் மேலும் புரளாது!!!
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா ……
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா!!!
கெடுக்குற நோக்கம் வளராது!!!
திருடாதே பாப்பா திருடாதே!!!
வறுமை நிலைக்கு பயந்து விடாதே!!!
திறமை இருக்கு மறந்து விடாதே!!!
திருடாதே பாப்பா திருடாதே பாப்பா திருடாதே!!!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் | Pattukottai Kalyanasundaram lyrics

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!!!
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த மருந்து சொல்லடா!!!

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா!!!
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த மருந்து சொல்லடா!!!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!!!
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா!!!
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!
இதயம் திருந்த மருந்து சொல்லடா!!!

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்!!!
ம்..ம்..ம்..ம்
ஓ...ஓ...ஓ...ஓ ஓ...ஓ...ஓ...ஓ
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்!!!
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்!!!
விரட்டல் வார்த்தைகள் ஆடும் பல வரட்டு கீதமும் பாடும்!!!
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா!!!
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா!!!
 அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்!!!
அதன் அழகை குறைக்க  நேவும்!!!
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்!!!
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்!!!
சிலர் குணமும் இதுபோல் 
குறுகி போகும் கிறுக்கு உலகமடா!!!